உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குண்டர் சட்டம் :இருவர் கைது

 குண்டர் சட்டம் :இருவர் கைது

வேடசந்துார்:அகரம் சுக்காம்பட்டி தண்டபாணி மனைவி அஞ்சலை 40. சுக்காம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சேடபட்டி கவுஸ் பாண்டி 28, சுரைக்காய்பட்டி ஆதி சிவன் 19, ஆகிய இருவரும் மாமூல் கேட்டுள்ளனர். மாமூல் தராததால் பட்டாகத்தியை வைத்து கடையை அடித்து நொறுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வேடசந்தூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரின் குற்ற நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் கிளை சிறையில் இருந்த இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி