உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

 குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

அம்பிளிக்கை: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் குளித்த சகோதரர்களான இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஆலய கவுண்டன்பட்டியில் வசிப்பவர் ரத்தினம். இவரது மகன்கள் வேல்முருகன் 12, லோகேஷ் 7, இருவரும் ஆலய கவுண்டன்பட்டி அருகே புகையிலை நாயக்கர் வலசு குளத்தில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. நேற்று மதியம் வேல்முருகன், லோகேஷ் இருவரது உடலும் குளத்தில் மிதந்தது. அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை