முறைப்படுத்தப்படாத ஆட்டோ கட்டணம் ;பக்தர்கள் அவதி
பழநி:பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அதிக அளவில் ஆட்டோக்களில் கட்டணம் வாங்குவதால் வெளியூர் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநி கோயிலுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், வயது முதியவர்கள் ஆட்டோவை நாடுகின்றனர். பழநி அடிவாரம் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் வெளியூர் பக்தர்களின் சூழலை அறிந்து ரூ.200 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். வெளி மாநில பக்தர்கள் இதில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதோடு பொழுதுபோக்குக்காக பயணம் செய்யும் குதிரை வண்டி பயணத்திலும் இதே நிலை நீடிப்பதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்