விவசாயிகள் போராட்டத்தால் தண்ணீர் திறப்பு
வத்தலக்குண்டு: உசிலம்பட்டி தாலுகாவில் 58 கிராமத்தினர் பயன்பெறும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 2024ல் இக் கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வைகை அணை முழு அளவை எட்டி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 58 கிராம கால்வாயிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உசிலம்பட்டி, விருவீடு விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். விருவீடு பகுதியில் கடையடைப்பும் நடந்தது. இதை தொடர்ந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டி பாலத்தினை கடந்து தண்ணீர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சென்றது. வத்தலக்குண்டு தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமையில் மாவட்ட 58ம் கால்வாய் பாசன விவசாயிகள் மலர் துாவி வரவேற்ற னர். தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் அன்பழகன், பொன்னம்பலம், தேவராஜ், சுப்பிரமணி, ராமசாமி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் பங்கேற்றனர்.