தொழிலாளி பலி
வேடசந்துார்: தஞ்சாவூர் பழைய மதுக்கூர் கட்டட தொழிலாளி குமார் 45. தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் அகரம் கிரியம்பட்டி தனியார் வணிக வளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். பிப்.21ல் குமார் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.