உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூஞ்சை, இரும்பு துகளுடன் குடிநீர் புளியம்பட்டி நகராட்சி மக்கள் அதிர்ச்சி

பூஞ்சை, இரும்பு துகளுடன் குடிநீர் புளியம்பட்டி நகராட்சி மக்கள் அதிர்ச்சி

பூஞ்சை, இரும்பு துகளுடன் குடிநீர் புளியம்பட்டி நகராட்சி மக்கள் அதிர்ச்சி பு.புளியம்பட்டி, :குடிநீர் குழாயில் குடிநீருடன் பூஞ்சைகள், இரும்பு துகள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. தற்போது அம்ருத் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் பணி நடந்து வருகிறது. ஏழாவது வார்டு காளமேகம் தெருவில் வீடுகளுக்கு நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.தண்ணீரை பாத்திரங்களில் சேகரித்து வைத்த போது பூஞ்சை, இரும்பு துகள் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 89 மூட்டை கொண்டு வந்தனர். காய்ந்தது முதல் தரம் கிலோ, 62 ரூபாய் முதல் 66 ரூபாய்; இரண்டாம் ரகம், 57 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை, 2.11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரக விற்பனை வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு(கிலோ), குண்டு உளுந்து, பச்சை பயிர், பாசிப்பருப்பு தலா, 130 ரூபாய்க்கும், தட்டை பயிர், 120, கொள்ளு, 80, கடலைப்பருப்பு, 120, கடுகு, 110, சீரகம், 380, பொட்டுக்கடலை, 110, மிளகு, 800, கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 110, வெந்தயம், 100, பூண்டு, 70 முதல், 200 ரூபாய் வரைக்கும், வரமிளகாய், 170, மல்லி, 130, புளி, 120 ரூபாய்க்கும் விற்பனையானது. * அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 18,690 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 47.93 ரூபாய் முதல், 5௯ ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6,152 கிலோ தேங்காய், 3.௪௩ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 4,423 மூட்டைகளில், ௧.௮௬ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 131.42 ரூபாய் முதல் 149 ரூபாய்; இரண்டாம் தரம், 42.51 ரூபாய் முதல் 141.79 ரூபாய் வரை, ௨.54 கோடி ரூபாய்க்கு விற்றது.* திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 47 விவசாயிகள், 6,582 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 59 ரூபாய், இரண்டாம் தரம், 40 ரூபாய்க்கும் ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ