ஈரோட்டில் ஒடிசா வாலிபர் கொலைசேலம் வாலிபர் உள்பட மூவர் கைது
ஈரோட்டில் ஒடிசா வாலிபர் கொலைசேலம் வாலிபர் உள்பட மூவர் கைதுஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே ஊழியர் பழைய குடியிருப்பு பகுதியில் கடந்த, 4ல், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தண்டபாணி, 30, கொலை செய்யப்பட்டு கிடந் தார். சூரம்பட்டி போலீசார் குற்ற வாளிகளை தேடி வந்தனர்.கொலை தொடர்பாக ஈரோட்டில் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பங் கஜ் போரா, 22, என்பவரை கடந்த, 5ல் சந்தேகத்தின் பேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடியவரை, மறுநாள் சங்ககிரி அருகே போலீசார் பிடித்தனர். இந்நிலையில் பங்கஜ் போரா, சேலம் பழைய சூரமங்கலம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ராஜூ, 32; ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகுல் திரிவேணி குமார், 32, ஆகியோரை, கொலை தொடர்பாக நேற்று கைது செய்த னர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறிய தாவது: கரூர் மாவட்டத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக, தண்டபாணி வேலை செய்து வந்தார். சொந்த ஊர் செல்ல கடந்த, 3ல் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். ஸ்டேஷன் முன்பகுதி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். அங்கு மது அருந்தி கொண்டிருந்த பங்கஜ், ராஜூ, ராகுல் உள்ளிட்ட நால்வர், தண்டபாணியிடம் பணம் இருப்பதை பார்த்து, ஹிந்தியில் பேசி அறிமுகமாகியுள்ளனர். தண்டபாணிக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. இதனால் மது, கஞ்சா பிடிக்க ரயில்வே காலனி பழைய குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்றனர். மது குடிக்க வைத்தும், கஞ்சா கொடுத்தும் போதை ஏற்றியுள்ளனர். இதற் காக தண்டபாணியிடம், 12 ஆயிரம் ரூபாயை பெற்று கொண்டனர். மேலும், ௩,௦௦௦ ரூபாய் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால் நான்கு பேரும் தண்டபாணியை நாடா கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கைகளால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். அவருடைய பணம், மொபைல்போனை எடுத்து தப்பியுள்ளனர். தண்டபா ணியின் பேண்ட் பாக்கெட்டில் ஆதார் கார்டு, விசிட்டிங் கார்டு இருந்தது. அதை ஆதாரமாக கொண்டு விசாரித்தபோது துப்பு துலங்கியது. மூவரை கைது செய்த நிலையில் ஒருவரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.தப்ப விட்டது தப்பில்லையாபோலீஸ் ஸ்டேஷனில் இருந்து பங்கஜ் தப்பியதை, எஸ்.பி.,க்கு தாமதமாக தெரிவித்தது மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்ததாக, சூரம்பட்டி தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகேசனை, மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு எஸ்.பி., ஜவகர் இடமாற்றம் செய்துள்ளார். சம்பவத்தின்போது பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது, பிற போலீசார் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.