சிவன்மலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
சிவன்மலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்புகாங்கேயம்:காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தை ஒட்டி, காங்கேயம் போக்குவரத்து அரசு கிளை சார்பில், 35 சிறப்பு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காங்கேயம்-சிவன்மலை, சிவன்மலை-திருப்பூர், காங்கேயம்-தாராபுரம், காங்கேயம்-சென்னிமலை மார்க்கங்களில் பஸ் இயக்கப்படுகிறது.பஸ் இயக்கத்தை கண்காணிக்க, பயணிகளுக்கு உதவும் வகையிலும், போக்குவரத்து ஊழியர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அதேசமயம் சிவன்மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல அறநிலையத்துறைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் உள்ளன. தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால், மூன்று தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து, ஐந்து பஸ்களாக அறநிலையத்துறை இயக்குகிறது. ஆனாலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருக்க நேரிடுகிறது. எனவே கூடுதல் பஸ் இயக்க, கோரிக்கை எழுந்துள்ளது.