வயிற்றில் அக்னி சட்டியை வைத்துகோவிலை வலம் வந்த பூசாரி
வயிற்றில் அக்னி சட்டியை வைத்துகோவிலை வலம் வந்த பூசாரிஅந்தியூர் :அந்தியூர் அருகே எண்ணமங்கலம் விராலிக்காட்டூரில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் வைபவம், 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இன்று பொங்கல் விழா நடக்கிறது. இந்நிலையில் கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்தில் நேற்று சட்டி வைக்கப்பட்டு அதில் தீ மூட்டப்பட்டது.அதை கோவில் பூசாரி தனது வயிற்றின் மீது வைத்தபடி, கோவிலை வலம் வந்தார். அவருடன் மேளக்காரர் மத்தளத்தை வயிற்றில் வைத்துக்கொண்டு உடன் சுற்றி வந்தார். ஆண்டுதோறும் இந்த இந்த வினோத நேர்த்திக்கடனை, பூசாரி மற்றும் மத்தளம் அடிப்பவர் தொடர்ந்து செய்து வருவதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.