உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு

ஈரோட்டில் போலீஸ் கொடி அணிவகுப்பு

ஈரோட்டில் போலீஸ் கொடி அணிவகுப்புஈரோடு,: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். அமைதியாக, நியாயமாகவும், தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.மரப்பாலத்தில் கொடி அணிவகுப்பு துவங்கியது. கச்சேரி வீதி நால்ரோடு சந்திப்பு, ப.செ.பார்க், மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில், சத்தி சாலை வழியாக மாநகராட்சி மண்டபம் வரை சென்றனர். துணை ராணுவத்தினர் 55, பட்டாலியன் போலீசார் 30, லோக்கல் போலீசார் 60 என மொத்தம் 145 பேர் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை