மேலும் செய்திகள்
மக்களுக்காக போராடினால் கைது தான் திமுக முடிவா?
18-Mar-2025
உள்ளாட்சி இணைப்பு; மக்களின் கருத்துப்படி அரசுக்கு பரிந்துரை ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சிகளுடன் பஞ்.,களை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களின் கருத்தை அரசுக்கு பரிந்துரையாக அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, புன்செய்புளியம்பட்டி நகராட்சிகளுடன் அருகேயுள்ள பஞ்.,களை இணைத்து விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதற்கு பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திலும் மனு வழங்கினர். இதுபற்றி உதவி இயக்குனர் (பஞ்.,கள்) உமாசங்கர் கூறியதாவது: பஞ்., பகுதிகளை அருகில் உள்ள பிற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்தால், நுாறு நாள் வேலை திட்ட பயனாளிகள் பாதிப்பர். சொத்து வரி உயரும் என பல்வேறு காரணங்களை கூறி, மக்கள் மனு வழங்கினர். இதன்படி மாநகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் பஞ்.,களை இணைக்க வேண்டாம் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தவிர, பவானி நகராட்சியுடன் குருப்பநாயக்கன்பாளையம் பஞ்.,; கோபி நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம், பாரியூர் பஞ்.,; புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சிகுட்டை, நல்லுார் பஞ்.,களை இணைக்கும் முடிவை கைவிட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
18-Mar-2025