உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலி விதைகள்விற்றால் நடவடிக்கை

போலி விதைகள்விற்றால் நடவடிக்கை

ஈரோடு, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல முன்னணி விதை உற்பத்தி நிறுவனங்கள், விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது. விதைகளுக்கு விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்பு துறையில் சான்றிதழ் பெறுவது அவசியம். இப்பதிவு முறையில் சில ரகம், சில வீரிய ரகத்துக்கு பதிவு முறையில் அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி விதை விற்பனை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள, 14 வகை விபரங்களை பார்த்து அறிந்து வாங்க வேண்டும். பதிவு சான்று பெறாத விதைகளை வாங்க வேண்டாம். அவ்வாறான விதைகள் விற்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விதை ஆய்வாளர்களான ஈரோடு - 99448 43823, பவானி - 95851 10662, கோபி மற்றும் காங்கேயம் - 79049 58939, சத்தியமங்கலம்- 88702 72424, தாராபுரம்- 97153 59078 என்ற எண்களில் விபரம் அறியலாம். புகாரும் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ