சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காங்கேயம்,:தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, போக்குவரத்து போலீசார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன்படி காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சென்னை கூத்துப்பட்டறை கலைஞர்களின் மூலம், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி, 20க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நுாற்றுக்கணக்கான மக்கள் பார்த்தனர்.