ரயில் மோதி வாலிபர் பலி
ரயில் மோதி வாலிபர் பலிஈரோடு:ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, சங்ககிரி-ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த வாலிபருக்கு, 35 வயது இருக்கும். ரயில் மோதி பலியானது தெரிந்தது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.