உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று முன்தினம் காலை, 1,691 கன அடி தண்ணீர் வெளியேறியதால், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பவானி ஆற்றில், 500 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணி முதல் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததால், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி