சாலை பணியாளர் செயற்குழு கூட்டம்
சாலை பணியாளர் செயற்குழு கூட்டம்தாராபுரம்:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க, மாநில செயற்குழு கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வைரவன் தலைமை வகித்தார். தமிழக நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.காலியாக உள்ள, 8,௦௦௦ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில நிர்வாகிகள் ஆறுச்சாமி, விஜயகுமார், ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.