உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 39 வழித்தடங்களில்மினி பஸ் அனுமதி

39 வழித்தடங்களில்மினி பஸ் அனுமதி

39 வழித்தடங்களில்மினி பஸ் அனுமதிஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், 65 புதிய மினிபஸ் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது. இதில், 39 வழித்தடங்களுக்கு, 88 பேர் விண்ணப்பித்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது.இதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், 39 பேருக்கு வழித்தடங்களுக்கான பர்மிட்டை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். ஆர்.டி.ஓ.,க்கள் ஈரோடு மேற்கு பதுவைநாதன், பெருந்துறை மாதவன், கோபி மோகனபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ