கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்
கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்ஈரோடு:நாமக்கல், காடச்சநல்லுாரை சேர்ந்தவர் ஆதித்யா, 28; பவானியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர். ஹூண்டாய் காரில் நேற்று மதியம் ஊருக்கு சென்றார். ஈரோடு-கருங்கல் பாளையம் காவிரி சாலையில் போலீஸ் செக்போஸ்ட் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை டிவைடரில் மோதியது. ஆனாலும் இடதுபுறம் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் மோதி நின்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தள்ளுவண்டியில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. காரில் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.