பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு
பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுசத்தியமங்கலம்:பண்ணாரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக புஷ்பரதம் திருவீதி உலா நடந்தது. நேற்று மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. சப்பரத்தில் அம்மன் உற்சவர் கோவில் முழுவதும் திருவீதி உலா வந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.*பண்ணாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர், வங்கி அலுவலர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். ரொக்கப்பணமாக, ௧.௦௩ கோடி ரூபாய், 217 கிராம் தங்கம், 839 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.