காங்கேயத்தில் ஜெ., பிறந்தநாள் விழா
காங்கேயம்: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொது செயலாளரு-மான ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா காங்கேயத்தில் நேற்று நடந்தது.காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நத்தக்காடையூரில் நடந்த விழாவில், ஜெ., உருவப்படத்துக்கு நிர்வாகிகள், தொண்-டர்கள், மக்கள் என ஏராளமானோர் மலர் துாவி மரியாதை செலுத்-தினர். பின் கட்சி கொடியேற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் திருப்பூர் மாவட்ட அம்மா பேரவை துணை செய-லாளர் இளங்கோ, கிளை செயலாளர் என்.எஸ்.என்.தனபால், கலைமணி, பொன்னுசாமி, பாலு, மகேஸ்வரன் விஸ்வநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காங்கேயம் ஒன்றியத்தில், 15 ஊராட்சியிலும் ஜெ., பிறந்தநாள் விழாவை கட்-சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.