உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலம்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேலம்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோபி,:பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி, கவுந்தப்பாடி அருகே வேலம்பாளையத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கவுந்தப்பாடி அருகே வேலம்பாளையத்தில் இயங்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று குவிந்தனர். வேலம்பாளையம், மணியங்காட்டூர், காட்டுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், ஆவரங்காட்டூர், பெருமாம்பாளையம், தன்னாசிபட்டி, கரட்டூர், மேட்டூர் பகுதிகளை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !