அண்ணாதுரை பிறந்த நாள் விழா
தாராபுரம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, தாராபுரம் வடதாரையில் இருந்து ஊர்வலமாக தி.மு.க.,வினர் நேற்று சென்றனர். பூக்கடை கார்னர் வழியாக சென்ற ஊர்வலம், பழைய நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. அங்கு அண்ணாதுரை சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான கட்சியினர், அண்ணாதுரை உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர்.