விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர்.