உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாநாடு

ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாநாடு

சத்தியமங்கலம்:ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு வடக்கு மாவட்ட இரண்டாவது மாநாடு சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளராக கந்தசாமி, தலைவராக சரவணகுமார், பொருளாளராக மோகன் ராஜ், மற்றும் துணை தலைவர்கள், செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சிமெண்ட், செங்கல், ஜல்லி, மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை