உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இதுவரை 102 வேட்பு மனு வினியோகம்

இதுவரை 102 வேட்பு மனு வினியோகம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும் இதுவரை, 102 வேட்பு மனுக்கள் பெற்று செல்லப்பட்டுள்ளன.இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை இலவசமாக பெற்று செல்லலாம்.எட்டு தொகுதிக்கும் சேர்த்து இதுவரை, 102 வேட்பு மனு பெற்று செல்லப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் மனு தாக்கல் செய்யலாம்.அடுத்த இரு நாட்களில் வேட்பு மனுக்கள் பெறுவது அதிகரிக்கும்.விண்ணப்பிக்கும்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் வைப்புத்தொகையாக, 5,000 ரூபாய்; இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். காசோலை, வங்கி வரைவோலை ஏற்கப்படாது.இவ்வாறு கூறினர்.* ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலமாக, மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கிருந்து இதுவரை, 30 பேர் வேட்புமனு வாங்கி சென்றுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை