வாக்காளராக சேர 18,754 பேர் படிவம் வழங்கல்
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் புதிதாக வாக்காளர்களாக சேர, 18,754 பேர் படிவம் வழங்கி உள்ளனர். மாவட்டத்தில் கடந்த பிப்., 23ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டனர். அன்றைய நிலையில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 17 லட்சத்து, 40,222 வாக்காளர் இடம் பெற்றனர். அதே நேரம் கடந்த ஜன., 31 முதல் கடந்த, 26 வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளிலும் புதிதாக வாக்காளராக சேர, தகுதியான நபர்களிடம் இருந்து படிவம் பெறப்பட்டன.தொகுதி வாரியாக வழங்கப்பட்ட படிவத்தை அந்தந்த பகுதி பி.எல்.ஓ.,க்கள் விசாரித்தனர்.