உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி சித்ரவதை 2 கொடூரர்கள் கைது

தொழிலாளி சித்ரவதை 2 கொடூரர்கள் கைது

ஈரோடு, சிவகிரி காந்திஜி வீதியை சேர்ந்தவர் மாரியப்பன், 56, கூலி தொழிலாளி. சிவகிரி பாரதி வீதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன், 38. ஆறுமுகம், 53; மூவரும் கடந்த, 14ம் தேதி இரவு சிவகிரி முருகன் ரைஸ் மில் ரோடு அருகே மது அருந்தியபோது வாய் தகராறு ஏற்பட்டது. பார்த்திபன், ஆறுமுகம் தகாத வார்த்தை பேசி கைகளால் மாரியப்பனை அடித்துள்ளனர். அவரது துணியை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்.அவரை நிர்வாணமாக வீட்டுக்கு போக சொல்லி துரத்தியுள்ளனர். இதுகுறித்து அவரது புகாரின்படி சிவகிரி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !