உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

ஈரோடு:ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் டூவீலர் திருட்டு போனது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார், பைக் களவாணிகளை தேடி வந்தனர். ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் வாகன சோதனையில், சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் சிக்கினார். விசாரணையில் வெள்ளோடு அருகே செம்மாண்டாவலசை சேர்ந்த பழனிச்சாமி மகன் சவுந்தர்யன், 24, என தெரியவந்தது. ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். நடந்த பைக் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. அவருடன் ஈரோடு, வில்லரசம்பட்டி, செம்பாம்பாளையத்தை சேர்ந்த சங்கர், 19, என்பவரும் ஈடுபட்டுள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்து, ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை