4 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
ஈரோடு, ஈரோடு மாநகரில் புதிதாக கட்டப்பட்ட நான்கு நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். இதில் திண்டல், காரப்பாறை, மெடிக்கல் நகர் பகுதியில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உட்பட நலத்திட்ட உதவி வழங்கினார். இதேபோல் ஞானபுரம், காவேரி ரோடு, பெரிய மாரியம்மன் கோவில் வீதியில் கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையங்களும் திறக்கப்பட்டன.செயல்படும் நேரம்ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி; மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும். என்ன நோய்களுக்கு சிகிச்சை இந்த மையங்களில் மகப்பேறு நலம், பச்சிளம் மற்றும் குழந்தை நலம், குடும்ப கட்டுப்பாடு, தொற்று மற்றும் தொற்றா நோய், இ.என்.டி., அவசர மருத்துவ சிகிச்சை, மனநலம், யோகா என, 12 அத்தியாவசிய சேவை வழங்கப்படும். 106 அத்தியாவசிய மருந்து, 14 ஆய்வக பரிசோதனை ஒருங்கிணைந்த ஆய்வக சேவை மூலம் மேற்கொள்ளப்படும்.