மேலும் செய்திகள்
உழவர் சந்தைகளில் 75.26 டன் காய்கறி விற்பனை
31-Mar-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெரியார் நகர், சம்பத் நகர் மற்றும் தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 40.34 டன் காய்கறி வரத்தானது. இதன் மதிப்பு, 15.48 லட்சம் ரூபாய். அனைத்து உழவர் சந்தைகளுக்கும் மொத்தம், 82.96 டன் காய்கறி வரத்தாகி, 30.37 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், சந்தைகளில் காய்கறி விற்பனை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது.
31-Mar-2025