உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முட்புதரால் சூழ்ந்த மயானம்

முட்புதரால் சூழ்ந்த மயானம்

சென்னிமலை, சென்னிமலை டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான மயானம், அரச்சலுார் ரோட்டில் உள்ளது. காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக விடியல் சேகர் இருந்தபோது, 2008ல், 2.35 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், காத்திருப்போர் கூடம் என மயானம் புதுபிக்கப்பட்டது. அதன்பின் யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது முட்புதர், செடி, கொடி படர்ந்து உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. பகலில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. மயானத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி