மேலும் செய்திகள்
காங்., பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா
20-Sep-2026
ஈரோடு:நடிகர் சிவாஜி கணேசனின், 99-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட காங்., மற்றும் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில், மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடந்தது. இதில் சிவாஜி கணேசன் பேசிய தேசப்பற்று வசனங்கள் என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவன் சஜேஷ் முதலிடம் பிடித்தார். தேசியமும் நடிகர் திலகமும் தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிபிநாஸ், காமராஜரின் தொண்டராக சிவாஜி கணேசன் என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது சபியுல்லாஹ் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் உட்பட போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக காங்., சிறுபான்மை மாநில முதன்மை துணைத்தலைவர் ஜவஹர் அலி, மண்டலத் தலைவர்கள் விஜயபாஸ்கர், புனிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
20-Sep-2026