கோபி தாலுகாவில் கூடுதலாக மழை பொழிவு
கோபி: கோபி தாலுகாவில், மாதந்தோறும் பெய்ய வேண்டிய, சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் மட்டும், 5.2 மி.மீ., மழை பெய்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில், ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. மே மாதத்தில், எட்டு நாட்களில், 199.8 மி.மீ., மழை; ஜூன் மாதத்தில் எட்டு நாட்களில், 125.8 மி.மீ., மழை; ஜூலை மாதத்தில் ஐந்து நாட்களில், 99.2 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் நேற்று வரை, 26 நாட்களில், ஏழு நாட்களில், 75.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவரை, 238 நாட்களில், 29 நாட்களில், 430 மி.மீ., மழை பெய்துள்ளது. இது சராசரி மழையளவை விட, 77 மி.மீ., கூடுதல் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.