உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரத்தில் மோதிய ஜீப் தப்பிய கலைஞர்கள்

மரத்தில் மோதிய ஜீப் தப்பிய கலைஞர்கள்

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே மரத்தில் ஜீப் மோதியதில் செண்டைமேள கலைஞர்கள் காயமடைந்தனர்.கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூரில் நடக்கும் திருமண நிகழ்வுக்கு, செண்டை மேள கலைஞர்கள் ஒன்பது பேர், ஜீப்பில் புறப்பட்டனர். புன்செய் புளியம்பட்டி அடுத்த புதுரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, 7:௦௦ மணிக்கு வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், வலதுபுற சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. டிரைவர் உள்பட, ௧௦ பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டனர். ஜீப் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை