உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாதி பெயரை கூறி தாக்குதல்; வலைதளத்தில் பொய் பதிவு: எஸ்.பி.,யிடம் மாணவர் புகார்; விசாரணைக்கு உத்தரவு

ஜாதி பெயரை கூறி தாக்குதல்; வலைதளத்தில் பொய் பதிவு: எஸ்.பி.,யிடம் மாணவர் புகார்; விசாரணைக்கு உத்தரவு

ஈரோடு: அத்தாணி, அத்தாணி குடியிருப்பு மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மயில்சாமி மகன் நவீன் குமார், 20; ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குமாரபாளையத்தில் ஒரு கல்லுாரியில் படிக்கிறேன். என் நண்-பர்கள் வெவ்வேறு கல்லுாரியில் படிக்கின்றனர்.என்னுடன் கல்லுாரியில் படித்த கார்த்திக் தம்பி லோகேஷ், கடந்த, 8ல் கரட்டூரில் விபத்தில் சிக்கினார். அந்தியூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 18ம் தேதி இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு, 9:30 மணிக்கு நானும், கார்த்திக், விமல், முருகன் மற்றும் லோகேஷ் ஆம்னி வேனில் சென்றோம். அத்தாணி கைகாட்டியில் லோகேஷை இறக்கி விட்டோம். அங்-குள்ள கடையில் நண்பர்களுடன் டீ குடித்தேன். நண்பர்கள் பூபதி, ரஞ்சித் ஆகியோர் கே.டி.எம்., பைக்கில் சென்றனர்.ஆம்னி வேனில் காஸ் நிரப்ப பங்க்குக்கு சென்றேன். இந்நி-லையில், 19ம் தேதி அதிகாலை, 12:30 மணிக்கு என்னுடன் இருந்த கார்த்திக்கிற்கு, பூபதி போன் செய்து இருவரையும் வழிம-றித்து சிலர் கட்டை, கம்பி, பைப்பால் அடிக்கின்றனர் என்று கூறி அழுதனர். சம்பவம் நடந்த இடமான கோபி, பொலவகாளி-பாளையத்துக்கு ஆம்னி வேனில் சென்றோம். அங்கு, 10 பேர் இருந்தனர்.பூபதி உள்ளிட்டோரை அடித்து கொண்டிருந்தனர். எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது நான் உள்ளிட்ட நால்வரையும் ஜாதி பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்து, பெற்றோரை இழிவாக பேசினர். எங்களை மொபைல் போனில் போட்டோ எடுத்து ஆடு திருட வந்தவர்கள் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதனால் கல்லுாரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை, 3:30 மணி வரை அடித்தனர். ஊர் பெரியவர்க-ளிடம் பெற்றோர்கள் பேசியதை தொடர்ந்து எங்களை விடுவித்-தனர்..அடித்து மிரட்டியவர்கள் பெயர் தெரியாது. மாறாக வீடு, அடையாளம் தெரியும். ஜாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் தவறான பதிவை போட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல் அத்தாணி கைகாட்டி பெருமாள் கோவில் புதுாரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் பூபதி, 21, புகார் செய்துள்ளார். புகாரை விசாரிக்க கோபி டி.எஸ்.பி.,க்கு, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !