உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு:ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டதால் ஈரோடு எஸ்.பி.,அலுவலகத்தில் நேற்று மதியம் பரபரப்பு ஏற்பட்டது.ராணிபேட்டை மாவட்டம் திமிரி நேரு பஜார் ராஜா ராணி டிரேடர்சை சேர்ந்த மனோகரன், 48. தன் மனைவி ஷீலா, மகன்கள் பார்த்திபன்,நளின் ஆகியோருடன் நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு எஸ்.பி., யிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது மனோகரன், தான் மறைத்து கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றி கொண்டார். பின்னர் மனைவி, மகன்கள் மீதும் ஊற்றினார். இதை பார்த்த போலீசார் உடனடியாக அங்கு வந்து நால்வரையும் மீட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். மனோகரன், திருச்சி பாப்பாகுறிச்சி ஸ்ரீதேவி பாஸ்கர் ரைஸ் மில் உரிமையாளர் ராஜா ஆகியோர் தங்களிடம் அரிசி வாங்கிய ஈரோட்டை சேர்ந்த கும்பல் ஒரு கோடி வரை பணம் தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை