மேலாண்மை விதிகள் குறித்து விழிப்புணர்வு
ஈரோடு:நாடு முழுவதும் கடந்த ஏப்.,1 முதல் திடக்கழிவு மேலாண்மை விதி-2026 அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு வைரபாளையம் நுண்ணுயிர் உரக்கிடங்கில், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து, சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், திடக்கழிவு மேலாண் விதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கினார்.மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை நான்காக பிரித்தல், மறு பயன்பாடு மற்றும் மறுசுழற்சி, வீடு வீடாக சேகரித்தல் மற்றும் குப்பை கிடங்குகளில் அறிவியல் பூர்வமாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தல் குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகர நல அலுவலர் அறிவுறுத்தினார்.