பேபி கால்வாய்- தூர்வார நடவடிக்கை தேவை
ஈரோடு: ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் ஆலை கழிவுகள், குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க, 7 கி.மீ., துாரத்துக்கு, துணை கால்வாயாக பேபி கால்வாய் கட்டப்பட்டது. இதில் வெளியேற்றப்படும் கழிவு பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டது. இதில்லாமல் பிளாஸ்டிக் குப்பை, கழிவு குவிந்து கிடக்கின்றன. இதனால் வாய்க்காலை ஒட்டி குடியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மலேரியா, டெங்கு பரவுவதை தடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து முதலாவது மண்டல தலைவர் பழனிசாமி கூறியதாவது: மக்களின் புகார், கவுன்சிலரின் கோரிக்கையை தொடர்ந்து நேரடியாக ஆய்வு செய்தேன். பேபி கால்வாயை துார்வார மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில், ஆணையாளர் மனிஷ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் இச்சிக்கலுக்கு தீர்வு காண்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு கூறினர்.