மேலும் செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு
23-Nov-2024
ஈரோடு, டிச. ௧௩-கோபி பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில், பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. தமிழ் துறை தலைவர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் தனலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கவிஞர் ஆதி பங்கேற்றார். 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற தலைப்பில் பேசினார்.இதை தொடர்ந்து பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லுாரிகளுக்கு இடையிலான கவிதை போட்டியில், முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கும் விழா நடந்தது. கல்லுாரி துணை முதல்வர், தமிழ் துறை தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினர். தமிழ் துறை உதவி பேராசிரியர் செந்தமிழ் செல்வி கூறினார்.
23-Nov-2024