உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடைகளில் கைவரிசை கோபியில் சிறுவன் கைது

கடைகளில் கைவரிசை கோபியில் சிறுவன் கைது

கோபி:கோபி அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர், மகாலிங்கம், 45; பழைய ஆஸ்பத்திரி வீதியில், பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை திறக்க வந்தபோது, மேஜை டிராயர் திறந்து கிடந்தது. அருகே இருந்த மற்ற நான்கு கடைகளிலும் திருட்டு போனது தெரிந்தது. மகாலிங்கம் கொடுத்த புகாரின்படி கோபி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக கோபி அருகே ஏளூரை சேர்ந்த, 15 வயது சிறுவனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பது விசாரணையில் தெரியவந்தது. சிறுவனிடம் இருந்து 3,570 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை