உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்தில் சீரமைப்பு இன்று துவக்கம்

பாலத்தில் சீரமைப்பு இன்று துவக்கம்

ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்-பட்ட பழுதை சீரமைக்க கடந்த மாதம், 27ம் தேதி முதல் கன ரக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 10 நாட்கள் மட்டுமே போக்குவரத்து மாற்றம் தொடரும். ஆனால் கடந்த, ௩ம் தேதி வரை ரயில்வே நிர்வாகத்தினர் பணிகளை தொடங்கவில்லை. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலி-யாக பழுது ஏற்பட்டுள்ள பகுதியில் தேங்கிய நீரை இயந்திரம் மூலம் உறிஞ்சி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முழுமையாக முடிந்த நிலையில், இன்று முதல் பழுதை சரி செய்யும் பணி துவங்கி நடைபெறும். இப்பணி நிறைவு பெற ஐந்து நாட்களாகும் என தெரிகிறது. எனவே அதுவரை போக்குவ-ரத்தை மாற்றி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ