டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு, டி.என்.பி.எஸ்.சி., - ஐ.டி.ஐ., லெவல்-2 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய கள உதவியாளர், 1794 பணி காலி இடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தால் வழங்கப்படும் ஒரு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று அல்லது தேசிய தொழில் பழுகுனர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான தேர்வு நவ., 16ல் நடக்க உள்ளது. அக்., 2 வரை ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வரும், 29ல் துவங்குகிறது. ஆங்கிலம், தமிழ் வழியில் பயிற்சி தரப்படுகிறது. கூடுதல் விபரத்துக்கு, 0424 2275860, 94990 55943 என்ற எண்ணில் அறியலாம்.