மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
27-Sep-2025
கோபி, கோபி அருகே ஏளூரை சேர்ந்தவர் அமிர்தசாமி, 60, கம்மங்கூழ் வியாபாரி; கடந்த, 2018 மே மாதம் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் அத்தாணி சாலையில் சென்றார். சென்னையை சேர்ந்த ஜெபராஜ், 37, ஓட்டி வந்த, டொயோட்டா குவாலிஸ் கார் மோதியதில் அமிர்தசாமி பலியானார். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாஜிஸ்திரேட் தாயுமானவர் நேற்று தீர்ப்பளித்தார். ஜெபராஜுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
27-Sep-2025