உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழனிக்கு முன் தோன்றிய சென்னிமலை...

பழனிக்கு முன் தோன்றிய சென்னிமலை...

சென்னிமலை: சென்னிமலை பழமையும், இலக்கிய பெருமையும் உடையது. சங்க இலக்கியங்களான நற்றிணை மற்றும் குறுந்தொகையில் இந்த தலம் குறிப்பிடப்பட்-டுள்ளது.சென்னிமலை என்றால் 'தலைமையான மலை' என்று பொருள். இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலை தான் தற்போதைய பழனி மலை. ஆனால், சென்னிமலை அதற்கு முன்பே தோன்றி-யதால் இது 'ஆதி பழனி' என்று அழைக்கப்படுகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலை, 'சிவாலயச் சோழன்' என்ற மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது.துவாபர யுகத்தில் புஷ்பகிரி என அழைக்கப்பட்ட இந்த மலையில் தான், முருகப்பெருமான் இடும்பனுக்கு காட்சியளித்து பொதிகை மலைக்கு செல்ல வழி காட்டினார். மேலும், பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மன்னனுக்கு, நேரில் வந்து அருள் புரிந்து, அவனது தோஷத்தை நீக்கியதாகவும் நம்பப்படுகிறது. சென்னி-மலை செங்குத்தாக இல்லாமல், அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில், 1,320 படிக்கட்டுகளை கொண்டுள்ளது.இங்கு நடைபெறும் ஆறு கால பூஜைகளில், மூலவர் தண்டாயுத-பாணி கோலத்தில் இருக்கும் முருகனுக்கே முதல் நிவேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே சன்னதி விநாயகருக்குப் பூஜைகள் நடைபெறும். முருகப்பெருமான் தனது பெற்றோரிடம் கோபித்து வந்து அமர்ந்த கோலத்தில் இருப்பதால், அவரைச் சாந்-தப்படுத்தும் விதமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை