உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கறிக்கோழி வியாபாரி விபரீத முடிவு

கறிக்கோழி வியாபாரி விபரீத முடிவு

ஈரோடு:ஈரோடு 46 புதுார் பெரிய செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 46; கடந்த, 25 ஆண்டாக பிரைம் கறிகோழி வியாபாரம் செய்தார். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன் தினம் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீனிவாசனுக்கு மனைவி, மகன்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை