மேலும் செய்திகள்
உபகரணங்கள் வழங்கவில்லை துாய்மை பணியாளர்கள் அவதி
26-Feb-2025
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், தனியார் நிறுவனம் மற்றும் நகராட்சி இணைந்து, துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளது. மொத்தம், 74 பேர் துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில், 47 பேர் தனியார் ஒப்பந்த தொழிலாளர். 27 பேர் நகராட்சி நிரந்தர ஊழியர். இவர்களுக்கு கையுறை, பூட்ஸ், முக கவசம் உட்பட ஆறு வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.ஆனால், முறையாக வழங்காததால், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலே, பணிகளில் ஈடுபடுவது குறித்து, நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, தனியார் ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நேற்று கையுறை வழங்கப்பட்டது. கால் பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஆர்டர் போடப்பட்டுள்ளது. வந்தவுடன் விரைவில் வழங்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
26-Feb-2025