சா.ம.ந.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு:சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வளர்மதி தலைமையில், ஈரோடு, கனி ராவுத்தர் குளம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு காவிரி ஆறு, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை உட்பட பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சாயக்கழிவுகளை பல நிறுவனங்கள் வெளியேற்றி வருகின்றன. இதில் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாயக்கழிவு நீர் வெளியேற்றத்தை முற்றிலும் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.