உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

புன்செய்புளியம்பட்டி:கோவை, சித்தாபுதுாரை சேர்ந்தவர் சக்திவேல், 52; பவானிசாகரை அடுத்த முடுக்கன்துறையில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, 6,400 ரூபாயை பறித்து தப்பினார். இதேபோல சத்தியமங்கலம் தனியார் மதுகூட பங்குதாரர் தங்கராஜிடம் ஒருவர், 8,500 ரூபாயை பறித்து தப்பினார். இரு புகார்களின்படி பவானிசாகர் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சஞ்சய், 25, என்பவரை கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். கைதான சஞ்சய் மீது, கொலை வழக்கு உள்ளிட்ட ஐந்து குற்ற வழக்கு உள்ளது. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள, சரித்திர பதிவேடு குற்றவாளி என்று, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை