உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணை நீர்வரத்து சரிவு

அணை நீர்வரத்து சரிவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று நீர்வரத்து, 39 கன அடியாக இருந்தது. அதேசமயம் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம், அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு, 3,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 83.81 அடி, நீர் இருப்பு, 17.7 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையின், 71 ஆண்டு கால வரலாற்றில், கோடை சீசனில் முதன் முறையாக நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளதாக, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !