மகள் மாயம்; தந்தை புகார்
கோபி, கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் திவ்யா, 24; கருத்து வேறுபாடால் கணவர் செந்தில்குமாரை பிரிந்து, ஒன்பது மாதமாக அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 6ம் தேதி வெளியே சென்ற திவ்யா வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை பழனிச்சாமி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.